மக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின்

131

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சென்னையில் இருந்து திருச்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். திமுக சார்பில் 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் திருச்சிக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கினர். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

புயலால் பாதித்த மக்கள் நடுத்தெருவில் நின்று கொண்டிருப்பதாகவும், புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஏன் உடனடியாக செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். அத்துடன் சேத மதிப்பு குறித்து மத்திய அரசின் கவனத்திற்குதமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.