பஸ் பாஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம்..!

588

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் மாதாந்திர பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மாதாந்திர போக்குவரத்துக் கட்டணம் தற்போது ஆயிரம் ரூபாயாக உள்ளது. இது ஆயிரத்து 300 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், போக்குவரத்து கழகங்களை லாபகரமாக இயக்காமல் கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல என்றும், ஏழை எளிய மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை போக்குவரத்துக் கழகம் விரிவான வகையில் செய்து தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், 30 லட்சம் ரூபாய் செலவில் 448 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதாகவும், ஏழை எளிய மக்களை துயரத்தில் ஆழ்த்தும் வகையில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்துள்ள அவர், போக்குவரத்து கழகத்தின் இந்த கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.