அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா? – மு.க.ஸ்டாலின்

123

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகுவைத்துவிட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார். இதோ, ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிடுகிறேன் என்று கூறிய அவர், அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். உற்பத்தி செய்யாத காற்றாலைக்கு 9 புள்ளி 17 கோடி ரூபாய்க்கு போலி பில் தயாரித்தது அம்பலமாகியுள்ளதாகவும், அந்த முறைகேட்டுக்கு ஆதாரமாக தணிக்கை அறிக்கையையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.