டிஜிபி ராஜேந்திரனை கைது செய்ய தயங்குவது ஏன் திமுக தலைவர ஸ்டாலின் கேள்வி..!

321

குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனை கைது செய்ய தயங்குவது ஏன் திமுக தலைவர ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிபிஐ சோதனை நடத்திய பிறகும் டிஜிபியை இதுவரை டிஸ்மிஸ் செய்யாதது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
குட்கா ஊழலில் லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முறைகேடு தொடர்பாக லஞ்சம் வாங்கியவரை கூட இதுவரை கைது செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், ஆதாரங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரையும், டிஜிபி ராஜேந்திரனையும் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆட்சியை நிலைநாட்டும் வகையில் சிபிஐ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.