அமைச்சர், டிஜிபி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்தும் மு.க.ஸ்டாலின்..!

342

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ சோதனைக்கு ஆளாகிய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இந்தநிலையில், அவர்களை பதவிகளிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீக்கம் செய்ய வேண்டும் என கூறிய மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை உடனடியாக கைது செய்வது அவசியம் என்று வலியுறுத்தினார்..