பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை – அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

433

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க, அமைச்சரவையை கூட்டி, முடிவெடுத்து, அவர்களை விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் தலைவர் கருணாநிதி ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த திமுகவின் நிலைப்பாடு என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும் 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.