எடப்பாடி அரசு கமிஷனை தூர்வாருகின்றதே தவிர கால்வாயை தூர்வாரவில்லை – மு.க.ஸ்டாலின்

231

எடப்பாடி அரசு கமிஷனை தூர்வாருகின்றதே தவிர கால்வாயை தூர்வாரவில்லை என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி திருச்சி முக்கொம்பு அணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதற்கு அதிகளவில் நடைபெற்ற மணல் கொள்ளை தான் காரணம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் விவாத பொருளாகியிருக்கும் நிலையில், திருச்சி முக்கொம்பு அணையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தலைவரும் திராவிட முன்னேற்ற கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திருச்சி முக்கொம்பு அணையை முன்னரே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடையாமல் தடுத்திருக்கலாம் என்றார். இதனிடையே எடப்பாடி அரசு கமிஷனை தூர்வாருகின்றதே தவிர கால்வாயை தூர்வாரவில்லை என குற்றம்சாட்டிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.