ஜனநாயகத்தை பாதுகாப்போம் என சபதம் – மு.க.ஸ்டாலின்

110

கருணாநிதி தந்த லட்சியச் சுடரை, திமுக கையில் ஏந்தி இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஜனநாயக மாண்பினை, சமூக நீதிக் கொள்கைகயை, மாநில உரிமைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை இருப்பதை, கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில் பேசியோர் அனைவரும் நினைவூட்டியதாக தெரிவித்துள்ளார். திமுக எனும் மாபெரும் இயக்கம் கருணாநிதி தந்த லட்சியச் சுடரை கையில் ஏந்தி இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாநில உரிமையை மீட்டெடுக்கும் பணியில், களம் காண்போம், கருணாநிதி மீது ஆணையிட்டு வெல்வோம் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை தான் ஒருவனாகச் செய்திட இயலாது, அனைவரின் ஆதரவும் அவசியம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.