கமலாலயத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள் மரியாதை..!

290

சென்னை பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்திக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்காக, எடுத்து வரப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி, சென்னை கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் வாஜ்பாய் அஸ்திக்கு இன்று மரியாதை செலுத்தினர். மேலும், பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் படத்திற்கும் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கமலாலயத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை செலுத்தினர்.