கொள்ளிடம் பாலத்தில் விரிசலை சீரமைக்க வேண்டும் – தலைவர் மு.க.ஸ்டாலின்

497

கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை ராணுவ உதவியுடன் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டரில், கொள்ளிடம் பழைய பாலத்தில் ஆறாவது தூணில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருப்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பழைய பாலத்தில் போக்குவரத்தை மட்டும் தடை செய்துவிட்டு அதிமுக அரசு அமைதி காப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.