சாவல்களை வெல்வேன் – திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

365

திமுக-வுக்கு எதிராக உருவாக்கப்படும் சவால்களை கருணநிதியின் வழியில் வென்று காட்டுவேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து துறைகளிலும் சிகரமாக உயர்ந்திருந்த தமிழ்நாட்டை மாநில ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளியிருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோன்று, மத்திய ஆட்சியாளர்களும் மதவெறியை விதைத்து மாநில உரிமைகளை பறித்து கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்ட தான், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என்று கூறியுள்ள அவர், திமுக-வுக்கு எதிராக உருவாக்கப்படும் சவால்களை கருணநிதியின் வழியில் வென்று காட்டுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.