தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் – தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்

327

கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதால் தொண்டர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதி உடல் நிலை குறித்து கவலையடைந்த தி.மு.க தொண்டர்கள் 21 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். தி.மு.க தொண்டர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதி உடல் நிலை சீராகி வருவதால் தி.மு.க தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.