நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு..!

482

பா.ஜ.க வுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்கப்போவதாக கூறிய ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெறும் ஊழலை மூடி மறைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பா.ஜ.க மற்றும் தமிழக அரசின் திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பதில் தி.மு.கவிற்கு எந்த ஆச்சரியமும் இல்லை என்றார். இதுவரை நடந்த ஐ.டி ரெய்டு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை எனவும் கூறினார். வருமான வரித்துறை சோதனை தொடர்பாக வரும் 23ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு அளிக்க போவதாகவும் தெரிவித்தார்.