சமூக விரோதிகள் யார் என்பதை நாட்டிற்கு ரஜினிகாந்த் அடையாளம் காட்ட வேண்டும் – ஸ்டாலின்

252

சமூக விரோதிகள் யார் என்பதை நாட்டிற்கு ரஜினிகாந்த் அடையாளம் காட்ட வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை போராட்டம் நடத்தி தான் தீர்வு காணப்பட்டதாகவும், போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை என்றும் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று ரஜினி கூறுவது அவருடைய சொந்த குரல் இல்லை என்று தெரிவித்தார். அவருக்கு பின்புலத்தில் இருந்து கூறுவது பா.ஜ.க குரலா அல்லது அ.தி.மு.க குரலா என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.