மருத்துவமனையில் ஸ்டாலின் திடீர் அனுமதி | கண் சிகிச்சைக்காக என அண்ணா அறிவாலயம் தகவல் !

340

திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கண் சிகிச்சைக்காக சென்னை நுங்கம்பாக்கம் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்குக் கடந்த சில தினங்களாகக் கண்ணில் பிரச்னை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கண்ணில் புரை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் செல்லவில்லை. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின், கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சென்னை அண்ணா அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.