ஸ்டாலின் பிரச்சாரப் பயணம்..!

201

மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் மே 1முதல் 8வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பரப்புரை ஆற்ற உள்ளார்.

இது குறித்துத் திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1, 2 ஆகிய தேதிகளில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மே 3, 4ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மே 5, 6ஆகிய தேதிகளில் சூலூர் தொகுதியில் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை ஆற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 7, 8ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை ஆற்ற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.