திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு..!

91

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. மேலும் மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐ.ஜே.க. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதை அடுத்து, மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் கூட்டணி கட்சிகளுடன் சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதை அதிகாரபூர்வமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.