தூத்துக்குடி மக்களை முதலமைச்சர் ஏன் நேரில் சந்தித்து பேசவில்லை..? – மு.க.ஸ்டாலின் கேள்வி

73

100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மக்களை முதலமைச்சர் ஏன் நேரில் சந்தித்து பேசவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மக்களை முதலமைச்சர் அல்லது அவரது பிரதிநிதிகள் ஏன் நேரில் சந்தித்து பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார். அந்த சமயத்தில் மக்களின் போராட்டத்திற்கு அரசு ஏன் தீர்வுக்காணவில்லை என்று பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களின் சுற்றுசூழல் குறித்த கவலையை போக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.