பொங்கல் திருநாளுக்கான கட்டாய விடுமுறை ரத்து என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

111

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் திருநாளுக்கு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த கட்டாய விடுமுறையை இப்போது விருப்ப விடுமுறையாக மத்திய அரசு மாற்றியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
பொங்கல் திருநாள் என்பது தமிழகம் முழுவதும் சாதி-மத வேறுபாடுகள் கடந்து அனைவரும் கொண்டாடும் கலாசார விழா என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கை, இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியாக தெரியவில்லை என்பது கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

விருப்பமிருந்தால், விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள் என நிர்பந்திப்பது, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்படும் பண்பாட்டுத் தாக்குதல் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குறியாக்கும் விதத்தில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்,
பொங்கல் விழாவுக்கான கட்டாய விடுமுறையை ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் திருநாள் இடம்பெற வேண்டும் என அவர் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.