மத்தியில் ஒரு அரசும், மாநிலத்தில் ஒரு அரசும் ஆட்சி செய்வது விரைவில் முடிவுக்கு வரும் – திமுக தலைவர் ஸ்டாலின்

116

மத்தியில் ஒரு அரசும், மாநிலத்தில் ஒரு அரசும் ஆட்சி செய்வது விரைவில் முடிவுக்கு வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதன்பின் உரையாற்றிய அவர், தற்போதுள்ள அரசியல்வாதிகளை விட, இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அரசியலை அதிகமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் வந்து சேர்ந்திருப்பதாக தெரிவித்தார்.