எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடிகள் குறித்து எதிர்கட்சிகள் வாய் திறக்காதது ஏன் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

233

சென்னை : இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புகார்களும், ஆதாரங்களும் வெளியாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் மிகப்பெரிய எதிர்கட்சியாக உருவெடுத்து விட்டதாக பெருமைபட்டுக் கொள்ளும் தி.மு.க இந்த மோசடி விவகாரத்தில் வாய் திறக்க அஞ்சுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.மக்களைப் பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக கருத்து தெரிவிக்கும் இடதுசாரிகள், இப்பிரச்சினையில் கருத்து தெரிவிக்காமல் முடங்கி கிடப்பதற்கு காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டாமல் விசாரணையை தீவிர படுத்த வேண்டும் அல்லது மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.