ஸ்ரீ வைகுண்டத்தில் 864 பேருக்கு, நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சண்முக நாதன் வழங்கினார்.

214

ஸ்ரீ வைகுண்டத்தில் 864 பேருக்கு, நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சண்முக நாதன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலூகா அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தலைமை வகித்த இந்த விழாவில், அமைச்சர் சண்முக நாதன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இறப்பு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் 864 பேர் பயன் அடைந்தனர். இந்த விழாவில், தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் கோபாலசுந்தர், உதவி ஆட்சியர் ராகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.