இலங்கையில் சீன துறைமுகம் அமைப்பதற்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்துக்கு சிறிசேனா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

403

இலங்கையில் சீன துறைமுகம் அமைப்பதற்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்துக்கு சிறிசேனா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் அம்பான்தோட்டா என்ற இடத்தில் சீனா துறைமுகம் ஒன்றை அமைத்து வருகிறது. பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு இந்த துறைமுக திட்டத்துக்கு இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இதை எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் 9 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த துறைமுகத்தை கட்டும் பணியில் சீனா தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த துறைமுக திட்டத்தை மாற்றியமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்துக்கு சிறிசேனா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, துறைமுகம் கட்டும் பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது.