பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம்..!

204

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், வெளிநாடு சென்றுள்ள அதிபர் சிறிசேன அங்கிருந்து, நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை விரைவில் கண்டுபிடிப்போம் என்று தெரிவித்துள்ள அவர், மேலும், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள மைத்ரிபால சிறிசேன, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.