ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருக்கொட்டகை எனப்படும் பந்தல் கால் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

245

108 வைஷ்ணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த விழாவைக் காண இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருவது வழக்கம். இத்தனை பெருமை வாய்ந்த இந்த விழாவானது, அடுத்த மாதம் 18ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, ஜனவரி 18ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடைகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு ஜனவரி 8ஆம் நடைபெறவுள்ளது.