ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே உள்ள இந்திய முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் ..!

242

ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையம் அருகே உள்ள இந்திய நிலையை குறிவைத்து, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த நிலையில், விமான நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து இன்று அதிகாலை நான்கரை மணியளவில், முகாம் மீது திடீரென பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் அதிரடியாக களத்தில் இறங்கி, பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல் காரணமாக, விமான நிலையத்திற்குள் வாகனங்கள் செல்வதும், விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதை அடுத்து, ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.