இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல் 2 பேரை கைது…!

365

இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தினை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்து அதிகரிகள் நடத்திய சோதனையில் இலங்கையிலிருந்து 2 கிலோ தங்கம் கடத்தி வந்த காரை மடக்கினர். காரில் இருந்த சிராஜ், ஜக்கீர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 2 கிலோ தங்கம் மற்றும் கடத்துதலுக்கு பயன்படுத்திய காரினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.