இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

287

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 190 ரன்களை எடுத்து அசத்தினார்.
இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய புஜாரா 153 ரன்களில் ஆட்டமிழந்தார். 600 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி ஆட்டமிழந்தது.
இதனையடுத்து முதல் இன்னீங்சை தொடங்கியுள்ள இலங்கை அணி 3 மணி நேர நிலவரப்படி 1 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்களை எடுத்துள்ளது.