இலங்கை ஆதிக்க செயலுக்கு இந்தியா அடிபணிந்து செல்லக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ….

281

இலங்கை ஆதிக்க செயலுக்கு இந்தியா அடிபணிந்து செல்லக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாக தெரிவித்த ஜி.கே.வாசன், தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார். இலங்கை அரசின் ஆதிக்க செயலுக்கு இந்தியா அடிபணியகூடாது என்று கூறிய வாசன், அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்