இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 80 பேர் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்!

340

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 80 பேர் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 80 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதனிடையே, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 31 ஆம் தேதி விடுதலை செய்தது. இலங்கையில் நடைபெற்ற இந்திய பெருங்கடல் மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டதை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்தநிலையில், விடுதலை செய்யப்பட்ட 80 தமிழக மீனவர்களும் சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளனர். இதன்படி, மீனவர்கள் இன்று மாலை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.