இலங்கை அரசின் புதிய சட்டத்தால் தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள்….

218

இலங்கை அரசின் புதிய சட்டத்தால் தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் கைது நடவடிக்கை தொடரும் நிலையில், தமிழக மீனவர்களுக்கு எதிராக புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் இந்த புதிய சட்டம் இந்திய மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை குறிப்பிட்டுள்ள அவர்,
மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள தமிழக மீனவர்கள் மனம் கலங்கிப் போய் உள்ளதாக கூறியுள்ளார்.
எனவே, இலங்கை அரசின் சட்டத்தால் சிக்கல்கள் ஏற்படாத வண்ணம் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.