இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 80 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு!

398

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 80 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் மண்டபம் என மொத்தம் 80 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இந்தநிலையில், 80 மீனவர்களையும் விடுவிக்க இலங்கையில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் அனைவரும், இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். காரைக்கால் வந்த மீனவர்களை, நாகை மாவட்ட ஆட்சியர், தமிமுன் அன்சாரி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இதனையடுத்து, உணவு, உடை வழங்கப்பட்டு, அரசு செலவில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.