இலங்கை ராணுவத்திடம் சரணடந்தவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்-தமிழீழ மக்கள் கோரிக்கை!

280

இலங்கையில் சர்வதேச காணாமல் போனோர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது அப்பாவி தமிழர்கள் பலர் பலியாயினர். ஏராளமானோர் மாயமாகினர். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லை என்பது தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டது. காணாமல் போனவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து நீதி வழங்கக் கோரி வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்த தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.