இலங்கை சிறையிலிருந்து 77 மீனவர்கள் விடுவிப்பு இன்று மாலை தாயகம் வருகை !

321

இலங்கை சிறையிலிருந்து நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்.
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 90க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக கடந்த 28 -ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. இந்நிலையில் இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட் ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மீனவர்கள் 77 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர். சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம், இலங்கை கடற்படை அதிகாரிகள் தமிழக மீனவர்களை ஒப்படைக்க உள்ளனர். பிற்பகல் ஒப்படைக்கப்படும் மீனவர்கள், மாலைக்குள் காரைக்கால் துறைமுகம் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.