இலங்கை கடற்படைக்கு புதிய தளபதியாக தமிழரான ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

456

இலங்கை கடற்படைக்கு புதிய தளபதியாக தமிழரான ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை தளபதியாக இருந்த ரவீந்த்ர விஜேகுணரத்னம் பாதுகாப்பு படைகளின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இதனால் புதிய தளபதியாக தமிழக கடற்படை அதிகாரியான ட்ரெவிஸ் சின்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 21-வது கடற்படை தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரெவிஸ் சின்னையா, நியமனத்திற்கான கடிதத்தை அதிபர் சிறிசேனாவிடமிருந்து பெற்றுக் கொண்டார். இலங்கை கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் கடற்படை படிப்பை படித்து முடித்த சின்னையா 2016 -ம் ஆண்டு கிழக்கு மாகாண கடற்படை தளபதியாக இருந்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் கடற்படை தாக்குதலில் சின்னையா முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.