இலங்கை அரசு நிறுவனங்களுக்கு சூட்டப்பட்ட செளமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியதால் அதிர்ச்சி!

620

இலங்கையில் அரசு நிறுவனங்களில், தமிழர்கள் நலனுக்காக பாடுபட்ட செளமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டைமான் என தெரிவித்துள்ளார்.
இலங்கை மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக வாழ்வாதாரத்தை உறுதி செய்ய தம் வாழ்நாளை அர்ப்பணித்த சௌமியமூர்த்தி தொண்டைமான் பெயரை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கிய இலங்கை அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினையில் உடனடியாக பிரதமர் மோடி தலையிட்டு சௌமியமூர்த்தி தொண்டைமான் பெயரை மீண்டும் சூட்டி பெருமையை நிலைநாட்ட வேண்டும் என திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசு நிறுவனங்களுக்கு சூட்டப்பட்ட செளமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியது அதிர்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார். Thondaman
மேலும் தமிழர்களுக்காக பாடுபட்ட தொண்டைமானை அவமதிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.