பாகிஸ்தானில் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது இலங்கை அணி!

498

பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளனர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இதன் கடைசி 20 ஓவர் போட்டி பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக, பாகிஸ்தானுக்கு சென்று விளையாட நாங்கள் விரும்பவில்லை என்றும், லாகூர் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அந்நாட்டு வீரர்கள் கடிதம் அளித்துள்ளனர். இதனால் கடைசி 20 ஓவர் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி 2009–ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய போது, அவர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.