இலங்கையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு மரண தண்டனை!

574

இலங்கையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த பள்ளி மாணவி வித்யாவை 2015-ம் ஆண்டு ஒரு கும்பல் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முக்கிய குற்றவாளி சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக 7 பேரும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.