இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம்!

365

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில், கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் நடைபெற்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன வந்தார். அப்போது அரசியல் கைதிகளை விடுதலையை செய்யகோரி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுமக்கள் அதிபர் சிறிசேனாவுக்கு கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.