இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

266

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து மீண்டும் அட்டூழியத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழக எல்லையான கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் 2 விசைப்படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 10 பேரையும் கைது செய்தனர். 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்த அவர்கள், மீன்பிடி வலைகளை கிழித்து நாசம் செய்தனர். இதையடுத்து மன்னார் துறைமுகத்தில் வைத்து மீனவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு நாகை மீனவர்கள் 10 பேர் கைதான நிலையில், மீண்டும் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவ கிராமங்களில் அதிர்வலையை எற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.