ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் | தமிழர் மரபின் மீதான அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என கோஷம்

293

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிகோரி, தமிழகத்தில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக இலங்கை யாழ்பாணத்தில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் உலகத்தமிழர்கள் மத்தியிலும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இலங்கை யாழ்ப்பாணத்தில், ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாக யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. ஈழத்தில் தமிழர்கள் உரிமைகளுடன் வாழவேண்டும் என வலியுறுத்தி தம் இன்னுயிரையே கொடுத்தவர்களின் மரபின் மீது அடக்குமுறை விதிக்கப்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழத்தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.