இலங்கை கடல் பகுதியில் வெளிநாட்டினர் மீன் பிடித்தால் ஆறே முக்கால் கோடி அபராதம் !

423

இலங்கை கடலில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்களுக்கான, அபராத தொகை ஆறே முக்கால் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பது, தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வங்க கடல், பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அத்துமீறி இலங்கை கடலில் மீன்பிடிப்பதாக கூறி அந்நாட்டு கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை சிறையில் அடைப்பது, படகுகள், மீன்பிடி சாதனைகள் பறிமுதல் செய்வது என இலங்கை அரசின் அட்டூழியம் தொடர்கிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை கடலில் வெளிநாட்டினர் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தால் விதிக்கப்படும் அபராதத் தொகை, ஆறே முக்கால் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கையாக, இலங்கை அரசு இதை கொண்டு வந்து இருப்பதால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.