இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மீது பயிற்சியாளர் பாய்ச்சல்!

607
India's captain Virat Kohli, left, gestures, as Sri Lankan team members celebrate the dismissal of India's Murli Vijay during the first day of their third test cricket match against Sri Lanka in New Delhi, India, Saturday, Dec. 2, 2017. (AP Photo/Altaf Qadri)

மூன்றவது டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி 371 ரன்கள் குவித்ததற்கு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களே காரணம் என பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய இலங்கை அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டகாரர் ஷிகார் தவான் 23 ரன்களில் வெளியேற அடுத்து வந்த புஜராவும் 23 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த முரளி விஜய் மற்றும் விராத் கோலி சதம் கடந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயகே, இந்தியாவின் ரன் குவிப்பிற்கு தங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களே காரணம் என தெரிவித்தார். மேலும் 2ம் நாள் ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.