இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் குவிப்பு!

429

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 371 ரன்களை குவித்துள்ளது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் முரளி விஜய் 155 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி 156 ரன்களை விளாசி களத்தில் உள்ளார். இன்று அடித்த சதத்தின் மூலம் 20 வது டெஸ்ட் சதத்தையும் ஹாட்ரில் சதத்தையும் நிறைவு செய்த கோலி டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினார்
இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 317 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.