தமிழக மீனவர்கள் 10 பேர் கைது : இலங்கை கடற்படை அடாவடி நடவடிக்கை

208

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டையை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும் விரட்டியத்தனர். வலைகளை அறுத்து எறிந்தும் அட்டூழியத்தில் ஈடுபட்ட அவர்கள், 10 மீனவர்களையும் அவர்களின் ஒரு விசைப்படகையும் சிறைப்பிடித்து சென்றனர். இதனால் உயிர் பிழைத்தால் போதும் என மீனவர்கள் அவசர அவசரமாக கரைதிரும்பினர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.