ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு அநீதி இழைக்கிறது -மு.க.ஸ்டாலின்

389

இலங்கை தமிழர்களுக்கு நீதிகிடைக்க அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தரவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்கள் மீது ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல் குறித்த விசாரணைக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு அநீதி இழைப்பதாக மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராஜபக்சே மீது இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.தமிழர்களின் நிலங்களில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேறவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,இலங்கை தமிழர்களுக்கு நீதிகிடைக்க அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.பொது வாக்கெடுப்பு நடத்துவதே ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.