விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது, கடும் நடவடிக்கை எடுக்க இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு..!

343

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது, கடும் நடவடிக்கை எடுக்க இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தமிழரான இவர், யாழ்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இந்த கருத்து இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அமைச்சர் விஜயகலா மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிபர் சிறிசேனா உத்தர விட்டுள்ளார். பதவியில் இருக்கும்போது அரசுக்கு எதிராக பேசியது தவறு என்று அவர் கண்டித்துள்ளார்.