இலங்கையில் சிங்களர்கள், இஸ்லாமியர்கள் இடையே மோதல்.. 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் ..!

1356

கண்டியில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே இலங்கையின் கண்டி பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். வணிக நிறுவனம் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல இடங்களில் வன்முறை பரவியது. இதனால் கண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அதிபர் சிறிசேனா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 10 நாட்களுக்கு அவசர நிலையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் திசநாயகா தெரிவித்துள்ளார்.
ராணுவம் மற்றும் போலீசார் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலை தளம் மூலம் சட்ட விரோதமாக பிரசாரம் நடப்பதை கட்டுப்படுத்த உஷார்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் தடுக்க, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது என, இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.