நரேந்திர மோடிக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து…

152

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் மாபெரும் வெற்றியைப் பெற்றதற்குப் பாராட்டுக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடன் இணைந்து செயல்பட இலங்கை விரும்புவதாகவும் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.இதேபோல் பிரதமர் மோடிக்கு இஸ்ரேஸ் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் இந்தியா – இஸ்ரேல் இடையிலான நட்பு மேலும் வலுப்பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.