ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்றார்..!

144

இலங்கையில் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரனில் விக்ரமசிங்கேவுக்கு, அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கை உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கடந்த 50 நாட்களாக இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பதவிபிரமாணமும், ரகசிய காப்புறுதியும் செய்து வைத்தார்.

அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் நடைபெற்ற பனிப்போருக்கு இதன்மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அதிகாரம், கடைசிவரை எடுபடாமல் போனது.